இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது. மேலும் 44,459 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதுவரை மொத்தம் 2,98,88,284 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாட்டில் தற்போது 4,58,727 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 911 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 17,90,708 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 42,70,16,605 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.