முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

வெளியானது ‘நவரசா’ டீசர்

நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் என ஒரு நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் “நவரசா”. 9 நடிகர்களைக் கொண்டு, கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு என நவரச உணர்வுகளை மையப்படுத்தி 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படமாக நவரசா திரைப்படம் உருவாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். ’9’ என்ற என்னை சுற்றியே இத்திரைப்படம் அமைந்துள்ளதால், இப்படத்தின் டீசரும் ஜூலை மாதம், 9ஆம் தேதி காலை 9.09 மணிக்கு வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிரம்மாண்ட சிரிப்பில் தொடங்கும் இந்த டீசர், நவரச உணர்வுகளில் ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நேரடியாக  வெளியாகவுள்ளதாக இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவார் : டாக்டர் வரதராஜன்

Halley karthi

கூட்டணி வேறு கொள்கை வேறு; கொள்கைபடியே அதிமுக செயல்படும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Jayapriya

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

Halley karthi