திருச்சியில் வாய் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானம் செய்த காவல்துறையினர் மரக்கன்றுகளை நடவைத்து அனுப்பியுள்ளனர்.
பொதுவாக சாலைகளில் சண்டையிட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்வது உண்டு. இதுவே பிரச்னை அதிகமாக இருப்பது தெரிந்தால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் கண்டோன்மென்ட் அருகே வாய் தகராறில் ஈடுபட்ட இருவரை அழைத்து வந்த காவலதுறையினர் விசாரணை செய்தபோது, இருவருமே சமாதானமாக போவதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மாநகராட்சி ஆனையரின் உத்தரவின் பேரில் இருவரையும் அழைத்துச் சென்று வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நடவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







