நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 310- ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 51 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரையிலான மொத்த 3,01,34,445 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 527 ஆக உள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 267 ஆக உள்ளது.

கொரேனாவுக்கு தற்போது 6 லட்சத்துக்கு 12 ஆயிரத்து 868 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். கடந்த 24 மணி 60 லட்சத்து 73 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 30 கோடியே 79லட்சத்து 48 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 35 ஆயிரத்து 781பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரையிலான 39 கோடியே 95 லட்சத்து 68 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தொடங்கி 43- வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பைவிட கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 310- ஆக அதிகரித்துள்ளது” என மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







