கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கோவாக்சின் தடுப்பூசியை சில வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன எனவும் இதனால், கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மாணவர்கள், வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்ல முடியாமல் அவதிப்படுவதால் இந்த சிக்கலுக்கு விரைவில் முடிவு காண பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் எனவும், அப்படி பெற்றால் மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் வெளிநாடு செல்ல எத்தகைய சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என மம்தா பானர்ஜீ தெரிவித்துள்ளார்.







