முக்கியச் செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடிவருகிறது. ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இளம் பட்டாளங்களை கொண்ட இந்திய அணி, இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் இலங்கையை வீழ்த்தி வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் தோல்வியின் விளிம்பு வரை சென்று போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். சூர்யகுமார் 44 பந்துகளில் 53 ரன்களும், 8 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீபக் சாஹர் 82 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் இலங்கையும், 3-0 என்ற கணக்கில் வென்று இலங்கையை அவர்களது மண்ணிலே வொயிட் வாஷ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இந்தியாவும் களமிறங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் சேஸிங் செய்து வென்ற இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி விவரம்: பிரித்வி ஷா, ஷிகார் தவான், சஞ்சு சாம்சன்(WK),மனீஷ் பாண்டே, சூர்யகுமார், நிதிஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாஹர், நவ்தீப் ஷைனி, சேட்டன் சக்காரியா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

Halley Karthik

பொதுக்குழு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Web Editor

பொன்.ராதாகிருஷ்ணன் நலம்பெற விஜய் வசந்த் வாழ்த்து!