#IndependenceDay | பெண்கள் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தியின் வரிகளை பகிர்ந்த இயக்குநர் அட்லீ!

பெண்கள் பாதுகாப்பு குறித்த காந்தியின் கருத்தை இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.  இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு…

#IndependenceDay | Director Atlee shares Mahatma Gandhi's lines on women's safety!

பெண்கள் பாதுகாப்பு குறித்த காந்தியின் கருத்தை இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், இயக்குநர் அட்லீ “ஒரு பெண் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்புகிற அந்த நாள்தான் நம் தேசத்தில் மெய்யான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தனது சுதந்திர தின உரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இயக்குநர் அட்லீயும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பதிவை பகிர்ந்தது கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.