சுதந்திர தினம்: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் யார் யார்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு முதலமைச்சர் விஜய் தகைசால் தமிழர் விருது வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இன்று சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து எம்.கிருஷ்ணசாமிகளை வழங்கிச் சிறப்பித்தார்.

அதன்படி, முதலில் தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு வழங்கினார். மேலும் ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருது, கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த்துக்கு கல்பனா சாவ்லா விருது, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் எம்.கீதாஞ்சலி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, அரசு புனர்வாழ்வு மருத்துவமனை இயக்குநர் திருநாவுக்கரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவர் விருது ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், சிருஷ்டி அறக்கட்டளைக்கு மாற்றுத்திறனாளி நலனுக்காக செயல்படும் சிறந்த நிறுவனத்திற்கான விருது , திருவண்ணாமலையைச் சேர்ந்த பி. மணிமாறனுக்கு மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணி ஆற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது, எஸ்.சி.எம் கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியர்த்தியதற்கான விருது , நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிரவேல், இம்மானுவேல் ஆகியோருக்கு மாநில இளைஞருக்கான விருது ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.