இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அந்தவகையில், இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது.
இதனையடுத்து இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இணை சேர்ந்து சிறப்பாக ஆடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த நிலையில் கே.எல்.ராகுல் 77 ரன்களில் இருந்தபோது ஏற்பட்ட தசை பிடிப்பினால், Retire Hurt ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதனையடுத்து சிறப்பாக ஆடிய படிக்கல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் , 10 ஃபோர்கள், ஒரு சிக்ஸர் அடித்து 113 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறார். இதனிட்டையே கேப்டன் சுப்மன் கில் 28 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது தேவ்தத் படிக்கல் மற்றும் ரிஷ்ப் பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.




