INDvsNZ : ஒரு நாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்……!

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டியது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விரோட் கோலி 91 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இந்த வெற்றி மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான இந்த தொடரில் இருந்து இந்திய அணி வீரர்களான திலக் வர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விலகியிருந்த நிலையில் தற்போது மற்றொரு இந்திய அணி வீரரான வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். வாஷிங்டன் சுந்தரின் விலகல்  இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி முதன்முறையாக இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.