இன்று நடைபெறு வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 269 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
ஒருநாள் தொடரை எந்த அணி வெல்லும் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறு வருகிறது.
இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதார். நிதானமான ஆட்டத்தை ஆடியது ஆஸ்திரேலிய. 11வது ஓவரின் ஐந்தாவது பந்தில் அணிஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் ட்ராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை பறிகொடுத்து 33 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து கலம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் பாண்டயா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர், மிட்ஷெல் மார்ஸ் 47 ரன்கள் சேர்த்து அதிரடியாக அரைசதத்தினை நெருங்கி கொண்டு இருந்தநிலையில் அவரும் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதன் பின் களமிறங்கி நிதானமாக ஆடிவந்த டேவிட் வார்னர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அவரை தொடர்ந்து லபுசேன் 45 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அஸ்திரேலிய அணி 37.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்தது. பின் அப்போட் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் டிக்கெட் விற்பனை விரைவாக நிறைவு பெற்றது. இருப்பினும் இந்திய வீரர்களை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இன்றைய போட்டியையொட்டி 1,600 காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







