கிரேட்டா தன்பர்க்கிற்கு கௌரவ டாக்டர் பட்டம் : ஃபின்னிஷ் பல்கலைக்கழகம் அறிவிப்பு

உலக புகழ் பெற்ற காலநிலை ஆர்வலரும், சூழலியல் செயல்பாட்டாளருமான கிரேட்டா தன்பர்க்கிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கிரேட்டா தன்பர்க், உலகெங்கும் உள்ள காலநிலை ஆர்வலர்களாலும், சூழலியல் செயல்பட்டாளர்களாலும்…

உலக புகழ் பெற்ற காலநிலை ஆர்வலரும், சூழலியல் செயல்பாட்டாளருமான கிரேட்டா தன்பர்க்கிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கிரேட்டா தன்பர்க், உலகெங்கும் உள்ள காலநிலை ஆர்வலர்களாலும், சூழலியல் செயல்பட்டாளர்களாலும் அதிக அளவில் உச்சரிக்கப்படும் பெயர். காரணம் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அனைத்து நாட்டு அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியவர். பருவநிலை மாற்றங்களைத் தடுக்க, தன்னைப் போன்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம், பள்ளிக்குப் போகாதீர்கள் ! தங்களுக்காகவும், வருங்கால தலைமுறையினருக்காகவும் வெள்ளிக்கிழமை தோறும் வீதிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர்.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்தான மாநாட்டில் தனது 16 வயதிலேயே உரையாற்றிய இவர், உலகத் தலைவர்களிடம் கடுமையான தொனியில் ‘உங்களது வெற்று வார்த்தைகளால், எனது குழந்தைப் பருவத்தைக் திருடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று துணிச்சலாக கேள்வி கேட்டவர் என பருவநிலை மாற்றம் குறித்த அவசர நிலையை உலகெங்கிலும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்த்த
பெருமை இவருக்கு இருப்பதால் தான் .

இப்படிப்பட்ட பெருமைக்குரிய நபரான கிரேட்டா தன்பர்க்கிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. “டாக்டர் ஹானர்ரிஸ் காசா” என்ற பெயரில் கொடுக்கப்பட உள்ள இந்த பட்டம் பின்லாந்தின் உயரிய விருதாக கருதப்படுகிறது. பொதுவாக தத்துவ பீடம், கால்நடை மருத்துவ பீடம், இறையியல் பீடம் மற்றும் சட்ட பீடம் ஆகிய பிரிவுகளில் இங்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த முறை, ஜூன் 9 அன்று பல்கலைக்கழகத்தின் இறையியல் பீடத்தால் வழங்கப்படும் எட்டு கௌரவ டாக்டர் பட்டங்களில், கிரேட்டா துன்பெர்க்கும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விழா பின்லாந்தின்
பல நூற்றாண்டுகள் பழமையான ஜூபிலியின் ஒரு பகுதியாகும், இதில் தனிநபர்கள் தங்கள் தொழில்முறை மற்றும் கலை சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். அந்தவகையில் இது கிரேட்டா துன்பெர்க்கிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.