IND vs AUS 3rd Test Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுக்க, இந்தியாவுக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துது.
ஷுப்மன் கில் 31 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், இன்றைய ஐந்தாவது மற்றும் இறுதி நாள் ஆட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 4 பந்துகளில் லயன் பந்தில் அவுட்டானார். இதன் பின் களமிங்கிய ரிஷப் பண்ட் தனது வழக்கான அட்டாக்கிங் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஒருபுறம் புஜாரா பொறுமையாக விளையாட, மறுபுறம் பண்ட் பந்துகளை க்ளீயர் செய்து கொண்டிருந்தார். சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 97 ரன்களில் லயன் பந்தில் கேட்ச்சானார்.
புஜாராவும் 205 பந்துகளை சந்தித்து 77 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் போல்டானார். புஜாரா – பண்ட் பார்ட்னர்ஷிப் இணைந்து 148 ரன்கள் குவித்தது.
இதன்பிறகு ஹனுமா விஹாரியும், அஷ்வினும் களமிறங்கினர். 161 பந்துகளை சந்தித்த விஹாரி 23 ரன்களும், 128 பந்துகளை சந்தித்த அஷ்வின் 39 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலிய பவுலர்களால் கடைசி வரை இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை.
இறுதியில் போட்டி டிராவானதால், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.