ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட துருவத்தில் பனிக்காலம் நிலவி வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் மற்றும் மத்திய பகுதிகளில் பிளோமினா என்று பெயரிடப்பட்ட பனிப்புயல் தாக்கியது. இந்த கடும் புயலால் ஸ்பெயினில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டது.
இந்த பனிபுயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பனியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.







