கிரீஸில் ஒரே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் பயணிகள் ரயில் புறப்பட்டுள்ளது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. முதல் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவும் ரயிலில் இருந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பிப்ரவரியில் மட்டும் 63.69 லட்சம் பயணிகள் பயணம்: நன்றி தெரிவித்த மெட்ரோ நிர்வாகம்!
இதுகுறித்து தெசலி ஆளுநர் பேசுகையில், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எதிரே வரும் ரயில் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். ரயிலில் இருந்த 250 பயணிகள் பேருந்து மூலம் தெசலோனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-ம.பவித்ரா