முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வு

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு!

கடந்த பிப்.9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து கடந்த பிப்.17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத், அக்சர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் இந்த போட்டியில் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியா அணியில்,  உஸ்மன் குவாஜா, டிரவெஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் கென்ஸ்ட்காம், கமரூன் கிரீன், அலெக்ஸ் கார்னி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டுடி மொர்பி, மெதிவ் குஹ்னிமென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்த கோழிக்கு உங்கள் வயது ! – நம்பமுடிகிறதா ?

Web Editor

‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே’- விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ

G SaravanaKumar

சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

Halley Karthik