திருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!

திருச்சி தென்னூரில் உள்ள மணப்பாறையை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சாமிநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில்…

திருச்சி தென்னூரில் உள்ள மணப்பாறையை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சாமிநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது விசாரணைக்காக மணப்பாறை சாமிநாதனின் குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். மணப்பாறை சாமிநாதன் என்பவர் பிரபல பைனான்சியர் ஆவார். மேலும் இவர் லட்சுமி காபித்தூள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார்.

கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் அவரது உறவினர்கள்,  அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால், அந்த சோதனைக்கும் இந்த தொழிலதிபருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.