வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பொது ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு. 2020-21 ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் இருந்த நிலையில், கொரோனா அச்சறுத்தல் காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.







