வடிவேலு பட பாணியில்…சுவற்றை துளையிட்டு டாஸ்மாக்கில் மது அருந்திய நபர்கள்

திருவள்ளூர் அருகே அரசு மதுபான கடை சுவற்றில் துளை போட்டு கொள்ளையடிக்க முயன்ற இரண்டு நபர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கிய நிலையில் அதே கடையில் கத்தியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல் 30…

திருவள்ளூர் அருகே அரசு மதுபான கடை சுவற்றில் துளை போட்டு கொள்ளையடிக்க முயன்ற இரண்டு நபர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கிய நிலையில் அதே கடையில் கத்தியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற சம்பவம் மீண்டும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை தண்டலச்சேரி அருகே உள்ள அரசு மதுபான கடையில் சுவற்றில் துளை போட்டு கொள்ளையடிக்க முயன்ற போது நேற்று முன்தினம் மதுபான கடையில் இருந்த விலை உயர்ந்த மதுபானங்களை குடித்து வடிவேல் திரைப்பட பாணியில் போதை மயக்கத்தில் இருந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அதே மதுபான கடையில் பஞ்சாட்சரம், மகாதேவன் , தமிழ்ச்செல்வன்  என்ற மூன்று ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி விற்பனை செய்த பணம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் திருடன் திருடன் என அச்சத்தில் கூச்சலிட்டபோது தப்பியோடிய மூவரும் மது பாட்டில்களை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது வீசி விட்டு துப்பாக்கியை எடு கத்தியை எடு என கூறிக்கொண்டே அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். மதுபான கடை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் கத்தியை காட்டி பணத்தைப் பறித்து சென்ற மூன்று நபர்கள் மீது கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் சுவற்றில் துளை போட்டு கொள்ளையடிக்க முயன்ற இருவர் பிடிப்பட்ட நிலையில் பணம் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் தப்பியது என்ற நம்பிக்கையில் மீண்டும் ஊழியர்கள் மது விற்பனையை மேற்கொண்ட நிலையில் அதே கடையில் மீண்டும் கத்தியை காட்டி அரசு மதுபான கடை ஊழியர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • த.எழிலரசன்

Twitter id: https://twitter.com/EzhilJournalist

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.