தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும்…

தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி
முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட
அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகத்தில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் பங்கேற்று செறிவூட்டப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் அந்த அரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கினார்.

தொடர்ந்து, செறிவூட்டப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளில் இருக்கும்
நன்மைகள் குறித்தும், ஊட்டச்சத்துக்கள் குறித்தும் ஊழியர்கள் மற்றும்
பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.