அடிப்படை உறுப்பினர் முதல் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி வரை..!

அதிமுகவில் சாதாரண அடிப்படை தொண்டனாக ஆரம்பித்து, இன்று  அக் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த அரசியல் பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவில் ஜனநாயக முறைப்படி மக்களாட்சி மலர்ந்த…

அதிமுகவில் சாதாரண அடிப்படை தொண்டனாக ஆரம்பித்து, இன்று  அக் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த அரசியல் பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஜனநாயக முறைப்படி மக்களாட்சி மலர்ந்த போது, சாதாரண மக்களும் அரசியல் தலைமைகளாக உருவெடுக்கலாம் என்ற சூழல் வந்தது. ஆனால், அப்படியான ஒரு நிலை இன்று தொடர்கிறதா என்றால் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. காரணம்  தமிழ்நாடு மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் தலைதூக்கி நிற்கும் நிலைதான் இன்று அதிகமாக காணப்படுகிறது. அதே சமயம், சாமானியராக உள்ளே நுழைந்து தமிழ்நாடு முதல்வராகவும், கட்சியின் உயர் பொறுப்புக்கும் வர முடியும் என்பதை நிரூபித்து, நம் கண்முன்னே உதாரணமாக நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அரசியல் வாழ்க்கையில் வெள்ளி விழா காணும் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி கருப்பண்ணசாமி – தவசியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்து வந்துள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பெற்றோர் விருப்படி ராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மிதுன் என்ற ஒரு மகன் உள்ளார்.

சாதாரண ஒரு வெல்ல வியாபாரியாக தனது வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைத்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் காலூன்ற ஆரம்பித்தார். அப்படி 1974ஆம் அண்டு தனது 20 -வது வயதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண தொண்டராக தம்மை இணைத்துக் கொண்டார். அன்று அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக, கட்சியின் பொதுச்செயலாளராக, முதலமைச்சராக அவர் உருவெடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அண்மை செய்திகள் : அதிமுக பொதுக்குழு முதல் பொதுச் செயலாளர் தேர்தல் தீர்ப்பு வரை……

அரசியலில் கீழே இருந்து மேலே செல்வதெல்லாம் ஏதோ ஏணிப்படியின் மேலே கடகடவென ஏறிச்செல்வது போன்ற சாதாரண காரியம் எல்லாம் கிடையாது. கொஞ்சம் பரமபத விளையாட்டு போல தான் இந்த அரசியல் வாழ்க்கையும். அத்தகைய அரசியல் உலகில் சாதாரண அடிமட்டத் தொண்டனாக தன்னை இணைத்துகொண்டு மாவட்ட அளவில் கட்சியில் தன்னை உயர்த்திக் கொண்டார் பழனிசாமி.

அண்மை செய்திகள்: அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!

அதிமுகவில் இணைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு,1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இருந்தும் அந்த ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்த நிலையில், 1991-ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2-வது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நேரத்தில் சேலம் மாவட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், 2007ஆம் ஆண்டு அமைப்புச் செயலாளராகவும் உயர்ந்தார்.

இப்படி அடுத்தடுத்து அதிமுகவில் பல உயரங்களை தொட ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி, 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில், அதிமுக ஆட்சியை கைப்பற்றிய போது, எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது கட்சியில் முக்கியஸ்தர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு இணையாக அமைச்சரவையில் ஜெயலலிதா இபிஎஸ்ஸிற்கும் முக்கிய இடம் கொடுத்திருந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா.

இதையடுத்து 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை தக்க வைத்த போது, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இப்படி பல ஏற்ற, இறக்கங்களைக் கடந்து அமைச்சராக வலம் வந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று யாரும் எதிர்பார்க்கவிலை .

அத%E

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.