பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகளை விரட்டிய புலி!

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், வனத்தை சுற்றி பார்க்க ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று ஆக்ரோஷமாக விரட்டியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்,  கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம்,  கேரள…

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், வனத்தை சுற்றி பார்க்க ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று ஆக்ரோஷமாக விரட்டியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்,  கர்நாடக மாநிலம் பந்திப்பூர்
புலிகள் காப்பகம்,  கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று
வனப்பகுதியும் ஒன்றிணைந்த வனப்பகுதியாகும்.

இந்நிலையில்,  நேற்று மாலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஜீப் மூலம் பந்திப்பூர் புலிகள்
காப்பகத்திற்குள் சவாரி சென்றுள்ளனர்.  அப்போது,  மரத்தின் கீழ் புலி ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த சவாரி ஜீப் ஓட்டுநர் சுற்றுலா பயணிகளுக்கு புலியை காண்பித்துள்ளார்.  அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக புலி எழுந்து ஜிப்பை நோக்கி வந்த வண்ணம் இருந்தது.

திடீரென அந்த புலி,  வாகனத்தில் இருந்தவர்களை உறும்பியபடி அச்சுறுத்தியதால்
பரபரப்பு ஏற்பட்டது.  இருப்பினும், ஜீப் ஓட்டுநர் மிகவும் திறமையாக புலியிடமிருந்து சுற்றுலா பயணிகளை பாதுகாத்து அழைத்து வந்தார்.  இதனை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.