ஆந்திராவிலிருந்துத் தஞ்சைக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 285 கிலோ எடை கொண்ட கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்
அடிப்படையில் தஞ்சை மாவட்டக் காவல்துறைத் துணைத் தலைவர் ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலானத் தனிப்படைக் காவல் துறையினர் தஞ்சாவூர் அருகே
கோடியம்மன் கோயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை நிறுத்திக் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின் போது லாரியில் சுமார் 285 பொட்டலங்களில் கஞ்சா பதுக்கி
வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியையும் , கஞ்சாவையும்
பறிமுதல் செய்த காவல் துறையினர், லாரியில் வந்த மதுரையைச் சேர்ந்த ஹல்க் ராஜா
மற்றும் தென்காசியைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இந்தக் கஞ்சா எங்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்தக் கஞ்சாக் கடத்தலில் யார்
யார் தொடர்பு உடையவர்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டக் கஞ்சாவின் மதிப்பு
சுமார் ஒரு கோடி என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.