முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!

தெலங்கானாவில் பெம்பார்த்தி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான பூமியைத் தோண்டும்போது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமம் அமைந்துள்ளது. அங்கு நரசிம்மாலு என்பவருக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பழங்காலத்தைச் சேர்ந்த தங்கப் புதையில் நிறைந்த செம்பு பானை ஒன்று கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த செம்பு பானைக்குள் காதணி, மூக்குத்தி, கொலுசு உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் இருந்திருக்கிறது. பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தங்கம் 1.727 கிலோ மற்றும் வெள்ளி 187.54 கிராம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தங்கப் புதையில் அப்பகுதியில் முன்னோர் காலத்திலிருந்த கோயிலைச் சேர்ந்தது எனக் கருதிய அக்கிராம மக்கள்,  அப்பகுதியில் ஒன்று திரண்டு தேங்காய் உடைத்து, பூ வைத்து வழிப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியரிடம் அந்த மொத்த புதையலும் ஒப்படைக்கப்பட்டது. அந்த தங்கப் புதையல் எவ்வளவு ஆண்டு பழைமை வாய்ந்தது என்பது பற்றி அறிய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும்: நடிகை சாய் பல்லவி

Web Editor

சாலையின் நடுவே மின் கம்பங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்

EZHILARASAN D

முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

Halley Karthik