தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள…

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு தேவையான விமானங்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களை வாங்கி 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, 3 வது இடம் குறித்து உரிமை கோருவதில் உண்மை இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக மூன்றாவது கட்சியாக அல்ல, முப்பதாவது கட்சியாக இருந்தாலும் அதுகுறித்து கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.

பாஜகவிடமிருந்து அதிமுக விலகியிருப்பதற்கான காரணத்தை கூற வேண்டும் என்று தெரிவித்த கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக ஒரு நாள் மாறும் என்று தெரிவித்தார். வரும், 28ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி உங்களில் ஒருவன் நூலை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், நிகழ்ச்சி முடிந்தபிறகு உள்ளாட்சியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள்  பற்றி  ராகுல் காந்தி  எடுத்துரைப்பார் என்று கே. எஸ். அழகிரி தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.