வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது என்று பிரதமர நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில், 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் வரும் 28-ஆம் தேதியும், 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, ஹீன்காங்க் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர நரேந்திர மோடி, பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். அப்போது பேசிய அவர், மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆளும் கட்சியாக உள்ளதால், கடந்த 5 ஆண்டுகளில், மணிப்பூரில் வளர்ச்சிப் பணிகள் இரண்டு மடங்கு வேகத்தில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
இதன் மூலம் மணிப்பூரில் வளர்ச்சிக்கான வலிமையான அடித்தளம் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்த வளர்ச்சிப் பணிகள் மேலும் வேகமெடுக்க மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளாது என்று குற்றச்சாட்டை வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








