ராணுவத்தை சரணடையக் சொல்லவில்லை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி, அவ்வாறு நான் கூறவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 3 வது…

ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி, அவ்வாறு நான் கூறவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 3 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், உக்ரைன் ராணுவத்தை ரஷ்யாவிடம் அதிபர் ஜெலன்ஸ்கி சரணையடையக் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், அந்த தகவல் வதந்தி என ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில், நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நாட்டை விட்டுக்கொடுக்க போவதில்லை, ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.

முன்னதாக, நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம் என உயர் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, பேசி ஒரு செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.