மதுரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த வீரய்யாவின் மகன் பிரகாஷ் (வயது 21) மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் வாசல் அருகே அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது நண்பர்களுக்குள்ளாக ஏற்பட்ட தகராறு காரணமாக ஆறு பேர் கொண்ட கும்பல் பிரகாஷை சரமாரியாக வெட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘மதுரையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்; 4 பேர் பேர் கைது!’
ரத்த வெள்ளத்திலிருந்த பிரகாஷை மீட்ட உறவினர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே பரிதாபமாக பிரகாஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்மந்தப்பட்ட 6 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆறு பேரையும் போலீசார் தேடி வருகிறனர். மது போதையில் வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.