முக்கியச் செய்திகள் குற்றம்

மதுரையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்; 4 பேர் பேர் கைது!

மதுரை மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில் தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில், பதுக்கி வைத்திருந்த சுமார் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்துள்ளனர். மேலும், குட்காவை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் சதாம், உசேன், அன்வர், வல்லவன், ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடிய ராமு, ஜனார்த்தன் ஆகிய இருவரை தெற்கு வாசல் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மதுரை மாநகர பொறுத்தவரைக் குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களைக் கண்காணிப்பதற்கு சுமார் 14,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கஞ்சா, புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாநகர பொறுத்தவரைக் குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களைக் கண்காணிப்பதற்கு சுமார் 14,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கஞ்சா, புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘இரட்டை கோபுரம் எப்படித் தகர்க்கப்பட்டது தெரியுமா?’

இதற்கு முன்னதாக மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள தகவலில், நடப்பு ஆண்டில் மட்டும் 274.137கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 137 கஞ்சா விற்பனையாளர்கள் மீது நன்னடத்தை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிணையப் பத்திரத்தை மீறிய நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் : பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா

Halley Karthik

அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

பாகிஸ்தானில் 2 வாரத்தில் இந்து சிறுமிகள் 4 பேர் கடத்தல்

G SaravanaKumar