இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை நிறுத்துவது துரோகம் – பி.ஆர்.பாண்டியன்

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.   தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவ மழை பெய்தும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பவில்லை என கூறினார்.

 

எனவே, இந்த மாவட்டங்களை அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியை மையமாக கொண்டு மத்திய அரசு ஏற்றுமதி முனையைத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என்றும் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வேளாண் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி அரசுக்கும் நிதிசுமை ஏற்படுவதாக தெரிவித்த அவர், இதனை கருத்தில் கொண்டு வரி விதிப்பையும், உயர்வையும் கைவிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.