தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனிடையே முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன. பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




