குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.…

குஜராத் கடற்பகுதியில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் என்சிபி அமைப்புடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு படையினர் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதையடுத்து, குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தனர். ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள் :  #CSKvSRH – டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் இருந்து ரூ.12000 கோடி மதிப்பிலான 2500 கிலோ போதைப்பொருளை என்சிபி கைப்பற்றியது. கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை 3.400 கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/DefencePRO_Guj/status/1784522847790284812?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1784522847790284812%7Ctwgr%5Ea5f97dc230ebf101a96bd5b289301af04a6ad1bb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fpakistani-boat-apprehended-near-gujarat-coast-with-drugs-worth-rs-600-crore-14-arrested-101714298354062.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.