கும்பகோணம் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயால் அருகில் நின்றிருந்த கார் மற்றும் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது.
கும்பகோணம் ஆழ்வான் கோயில் தெருவில் சதீஷ் என்பவர் டீ தூள் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார். இன்று காலை ஸ்கூட்டரில் இருந்து புகை வந்துள்ளது. அதனை தொடர்ந்து ஸ்கூட்டர் எரிய தொடங்கியுள்ளதாகவும் பின்னர் அருகில் இருந்த
காரிலும் தீ பற்றி உள்ளது. காரில் பற்றிய தீ வேகமாக எரிய தொடங்கியதும் வீட்டின் ஒரு பகுதி தீ விபத்தில் சிக்கியது.
தகவல் தெரிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர் . அதற்குள் வீட்டில் இருந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஒரு கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்து சேதமடைந்தது.
மேலும் வீட்டில் இருந்த சதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு மயக்கம் ஏற்பட்டதை
தொடர்ந்து இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் நகர கிழக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—–ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்