தமிழகம் செய்திகள்

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த கரடி – வாழையை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து, வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலங்குளம் பகுதி விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக கரடி சுற்றி வருகிறது.

இன்று அதிகாலை கரடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி பாலனுக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களை சாய்த்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தனர். கரடியால் எந்த நேரத்திலும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். கரடி நடமாட்டத்தால் பகல் நேரங்களில் கூட விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை – அமைச்சர் ரகுபதி

EZHILARASAN D

புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்

Web Editor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க விருப்பம் -ஜி.பி.முத்து

Yuthi