மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!

அரியலூர் அருகே மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

அரியலூர் அருகே மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களான மோகன், சரவணன் ஆகிய மூன்று பேரும் மது குடிக்க நினத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மதுவிற்கு பதிலாக சானிடைசரை குடித்துள்ளனர்.

அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளங்கோவன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஆட்டோ ஓட்டுனர் இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் மோகன் மற்றும் சரவணன் ஆகியோர் பாண்டிச்சேரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இளங்கோவன் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.