முக்கியச் செய்திகள் இந்தியா

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்!

இந்தியாவின் பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரும், 1998-ம் ஆண்டு நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார்.

மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதன்காரணமாக கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள Institute of Liver and Biliary Sciences (ILBS) மருத்துவமனைக்கு அவர் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காகச் சென்றார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தார் .

கல்லீரல் புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை எடுதது வந்த அவர், இன்று காலை மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில், செக்தா கிராமத்திலுள்ள தன்னுடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 42.

டிங்கோ சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “குத்துச்சண்டை விளையாட்டில் நட்சத்திர வீரராக விளங்கிய டிங்கோ சிங்கின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

டிங்கோ சிங் 1998-ல் நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று பெருமை சேர்த்தவர். டிங்கோ சிங்கின் இந்த வெற்றியை கௌரவிக்கும் விதமாக அதே ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக டிங்கோ சிங்கிற்கு கப்பல் படையில் பணி வழங்கப்பட்டது. ஆனால் குத்துச்சண்டை விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவர் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆனார். குத்துச்சண்டை விளையாட்டில் டிங்கோ சிங் ஆற்றிவரும் பங்களிப்பு காரணமாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

டிங்கோ சிங் மறைவிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தந்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், விஜேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

தை அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது; அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Saravana

வெள்ளை மாளிகையில் தமிழ் மகள்!

Jeba

புதுச்சேரியில் ரங்கசாமி, நாராயணசாமி, வாக்களித்தனர்!

Gayathri Venkatesan