ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!

ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரம் கோயில் திருவிழாவில் இருதரப்பினாிடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரத்தில் உள்ள சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில்…

ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரம் கோயில் திருவிழாவில் இருதரப்பினாிடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரத்தில் உள்ள சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில் திருவிழா நடந்து வருகிறது. அதே போல் அதன் அருகே உள்ள கொள்ளீர்குளம் கிராமத்தில் மற்றொரு சமுதாயத்துக்கு சொந்தமான கோயில் திருவிழாவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கொள்ளீர்குளம் கோயில் திருவிழாவிற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் விட்டிலாபுரம் ஊர் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு
தரப்பினரும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில்  4 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கோப்பைகளையும் உடைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமையில்,
100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களை
மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி
போலீசார் வைத்தனர்.  இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.