சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டின் தலைநகரும், மெட்ரோ சிட்டி என அழைக்கப்படும் சென்னையில் அதிக மக்கள் வாழ்கின்றனர்.மக்கள் தொகை அதிகம் கொண்ட சென்னை மாநகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வேலைக்கு செல்லும் மக்கள், கல்லூரி, பள்ளிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் தினம் தினம் பயணம் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் பேருந்து, ரயில், மெட்ரோ போன்ற போக்குவரத்து சேவையை பயன்படுத்திகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையை கடந்த 2020ம் ஆண்டு எவ்வளவு மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கியதிலிருந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.
Press Release 02-01-2023 pic.twitter.com/RVZzzWUMik
— Chennai Metro Rail (@cmrlofficial) January 2, 2023
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 1,18,56,982 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 2,53,03,383 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள். இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 15,88,08,208 கோடி பயணிகள் பயணித்துள்ளார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







