பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பணி நீக்கத்தை ரய்து செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரி சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தற்காலிக செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வந்த ஆசிரியர்கள் உணர்வை மதித்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்தும், ஆசிரியர், அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தியும் உத்தரவிட்ட முதலமைச்சர் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பதுடன் கொரோனா கால நெருக்கடியில் தற்காலிக பணியாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.இது தொடர்பாக முதலமைச்சர் நோடியாகத் தலையிட்டு, பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் அர்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து செவலியர்களின் பணி, பெருந்தொற்று உருமாறிய வடிவங்களில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் மிக, மிகத் தேவை என்பதை கருத்தில் கொண்டு செவிலியர்கள் பணி நீக்கம் உத்தரவை ரத்து செய்து, அவர்களை மீண்டும் பணியமர்த்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.