நிவாரண பொருட்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு மத்திய அரசு IGST வரி விலக்கு அளிப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும்…

வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு மத்திய அரசு IGST வரி விலக்கு அளிப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரியிலிருந்து தற்காலிக விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைக் கண்காணிக்க மாநில அரசுகள் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி, நிவாரணம் அளிக்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக வழங்க அனுமதி அளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி நன்கொடையாக நிவாரண பொருட்களை இறக்குமதி செய்யும் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு அதிகாரியாக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.