கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 3,29,942 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,876 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனாவின் அதிவேக பரவலைக்கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைத் தினத்தில் ஆந்திராவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரிக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 3,29,942 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,29,92,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மட்டும் 3,876 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,49,992 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதிலும் 37,15,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினத்தில் 3,56,082 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 1,90,27,304 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.







