’என் குடும்பத்தினர் வந்தது மகிழ்ச்சி’: தமிழில் பேசிய ஹேமலதா – வீடியோ வெளியிட்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணி

குஜராத் அணிக்காக விளையாடும் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா தமிழில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதை அந்த அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் வெளியிட்டுள்ளது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று குஜராத் அணியும்…

குஜராத் அணிக்காக விளையாடும் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா தமிழில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதை அந்த அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் வெளியிட்டுள்ளது

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று குஜராத் அணியும் உபி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங்க் செய்த குஜராத் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமலதா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.  30 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். ஹேமலதாவுடன் ஜோடி சேர்ந்த ஆஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்தனர். இருப்பினும் இந்தப் போட்டியில் உபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் விளையாடியது குறித்து ஹேமலதா பேசியுள்ளார். தமிழிலேயே பேசும் அவர், இந்தப் போட்டியில் விளையாடியது குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோவை குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி : நிலநடுக்கம் – செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை

அந்த வீடியோவில், அரைசதம் எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதனுடன் எங்கள் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதனால் இந்த போட்டி மறக்க முடியாதது என்று ஹேமலதா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.