முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

5 வருட சம்பளம் போனஸ்! – ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!

தைவான் நாட்டைச் சேர்ந்த எவர்கிரீன் மரைன் என்கிற கப்பல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாத சம்பளத்தை போனஸாக அள்ளி கொடுத்திருக்கும் சம்பவம், உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன். உலக அளவில் கடல்வழி வணிகத்தில் மிகப்பெரிய ஸ்தானமாக இயங்கிவரும் இந்நிறுவனம், பங்குசந்தையில் அதிகபடியான லாபத்தை தொடர்ந்து ஈட்டி வருகிறது. அதில் குறிப்பாக கோவிட்-19 தொற்று சமயத்தில் கடல்வழி வணிகம் சிறப்பாக செயல்பட்டதால் எவர்கிரீன் நிறுவனத்தின் வளர்ச்சி எங்கோ சென்று இந்நிறுவனத்தின் பங்கின் விலை 2021 ஆம் ஆண்டு 250% உயர்ந்தது. அதே போல் கடந்த 2022ஆம் நிதியாண்டிலும் சுமார் 16.25 பில்லியன் டாலருக்கு நிகரான லாபத்தை இந்நிறுவனம் ஈட்டியதால் மிகப்பெரியதொரு விஷயத்தை தங்கள் ஊழியர்களுக்காக எவர்கிரீன் நிறுவனம் செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொதுவாகவே இந்நிறுவனம், ஆண்டு இறுதியில் தனது லாபத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட எவர்கிரீன் மரைன் நிறுவனத்தின் லாபம் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததால், மிகப்பெரிய போனஸ் அறிவிப்பினை தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 5 வருடம் வரையிலான சம்பளத் தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்த ஊழியர் நான்காண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக பெறுவார். எடுத்துக்காட்டாக இந்நிறுவனத்தில் ஜூனியர் லெவல் ஊழியருக்கான அடிப்படை சம்பளம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக இருந்தால், சுமார் 60 லட்சம் ரூபாய் வரை போனஸாக கிடைக்கும் என கூறப்படுகிறது. அப்படி என்றால் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சில கோடிகளை போனஸாக பெற்றிருப்பார்கள் என்றும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்பு உலகளவில் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு. பணிபுரிந்தால் இப்படி ஒரு நிறுவனத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 என்று மட்டும் அல்லாமல், 2021-ம் ஆண்டிலும் இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு 40 மாத சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சி

Halley Karthik

நகைக்கடையை சூறையாடிய முதியவர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

G SaravanaKumar

வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வாகனங்கள் செல்வதாக பொன்முடி குற்றச்சாட்டு!

Halley Karthik