“ரஜினியின் ‘கூலி’ படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா” – என்ன காரணம்?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக,  சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்  ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக,  சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்  ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  ‘சன் பிக்சர்ஸ்’  நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்துக்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.  இந்த திரைப்படத்தின் படபடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த திரைப்பபடத்தின்  டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரீரிலீஸானது அஜித்தின் மூன்று முக்கியப் படங்கள் – திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில்,  அந்த டீசரில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘தங்கமகன்’  திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வா வா பக்கம் வா’ பாடலை  மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர்.  இந்த நிலையில்,  கூலி திரைப்படத்தில் தனது பாடலை உரிய அனுமதி பெறாமலும்,  ராயல்டி செலுத்தாமலும் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும்.

எனவே,  கூலி திரைபடத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு செய்யாத பட்சத்தில்,  சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.