பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரீரிலீஸானது அஜித்தின் மூன்று முக்கியப் படங்கள் – திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகம்!

பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குமாரின்  மூன்று முக்கியப் படங்கள் – திரையரங்குகளில் ரீரிலீஸாகியுள்ளதால்  ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித் குமாருக்கு மே 1ம்…

பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குமாரின்  மூன்று முக்கியப் படங்கள் – திரையரங்குகளில் ரீரிலீஸாகியுள்ளதால்  ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித் குமாருக்கு மே 1ம் தேதி பிறந்தநாளாகும்.  பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வழிபாடுகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். மேலும் அவரது பிறந்தநாளுக்கு அவரது பழைய படங்களும் ரீரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் அதனைக் கொண்டாடித் தீர்ப்பர்.

அந்த வகையில் இந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது மூன்று முக்கியப் படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. அவற்றில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான தீனா மற்றும் மிகப்பெறும் வெற்றிப்படமாக அமைந்த பில்லா ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

அதேபோல கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்,  அர்ஜூன்,  த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படமான மங்காத்தா அஜித்திற்கு ஒரு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது.  அக்காலகட்டத்தில் சிறிய பின்னடைவில் இருந்த நடிகர் அஜித்துக்கு அவரின் 50-வது படமான மங்காத்தா மாபெரும் வெற்றியாக அமைந்தது.  கதாநாயகனாக மட்டுமே அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் ஒரு வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா ஆகும். இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.

இந்த நிலையில் மங்காத்தா திரைப்படம் யுனிவர்ஷல் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.  தமிழ்நாட்டில் ரீரிலீஸ் செய்யப்பட்ட தீனா திரைப்படத்தில் FDFS காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றன. இப்படத்தின் இயக்குனரான  ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் பிறந்த நாள் குறித்தும்,  தீனா ரீரிலீஸ் குறித்தும் தெரிவித்துள்ளதாவது..
Image
” என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான ‘தீனா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆவதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது; ‘தல’ என்ற வார்த்தைக்கு வரையறையாக திகழ்ந்த அஜித் சார்க்கு நன்றி; மீண்டும் ஒருமுறை ‘தீனா’வை திரையரங்குகளில் கொண்டாடுவோம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.