மக்களுக்கான தலைவராக வேண்டுமென்றால்….. ; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை…..!

மக்களுக்கான தலைவராக வேண்டுமென்றால் விஜய் சில தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக உள்ளது. இன்னும் சில கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்லும்.

தேர்தல் பொறுப்பு என்பது நிரந்தரமான பொறுப்பு அல்ல. அண்ணாமலை எதுவும் சொல்லவில்லை. ஊடகங்கள் தான் இதனை பெரிதுபடுத்திவிட்டன. கட்சியில் இது சாதாரணமான விஷயம்.

மக்களுக்கான ஒரு தலைவராக வேண்டுமென்றால் விஜய் சில தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும். சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். ஒரு கட்சித் தலைவராக இருந்து கொண்டு கட்சி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதுதான் இவர்களது கொள்கை என்றால் இவர்களால் மக்களுக்கு என்ன செய்ய முடியும். கூட்டத்தை யார் வேண்டுமானாலும் கூட்டலாம. ஆனால் எல்லோரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆக முடியாது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.