காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மாதாந்திர ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி விசாரணை நிலையை கண்காணிக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும்.
முக்கிய தகவல்களை கொண்டு முழுமையாக கண்காணிப்போடு செயல்பட வேண்டும். சார்ஜ் ஷீட் பைல் பண்ணுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதில் தாமதம் காணப்பட்டால் நீதிக்கு நாம் செய்யும் பிழை. காவல் கண்காணிப்பாளர்கள், களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல வேண்டும். கிராம, நகர மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது கலந்துரையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.