“நாங்கள் நினைத்தால் பாஜகவை வேரோடு, வேராகா அழித்து விடுவோம்” -வைகோ காட்டம்!

நாங்கள் நினைத்தால் பாஜகவை வேரோடு, வேராகா அழித்து விடுவோம் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். தாம்பரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து கூட்டணிக் கட்சியான மதிமுக…

நாங்கள் நினைத்தால் பாஜகவை வேரோடு, வேராகா அழித்து விடுவோம் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.

தாம்பரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து
கூட்டணிக் கட்சியான மதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, நாட்டின் பிரதமர் மோடி எல்லை மீறியும், தன்னிலை மீறியும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
பிரதமராக இருப்பதற்கே தகுதி அற்றவராக மோடி உள்ளார்.

திராவிட இயக்கத்தை அழித்துவிடுவதாகப் பிரதமர் கூறுகின்றனர். எந்த கொம்பனாலும்
திராவிட இயக்கத்தை அழித்து விட முடியாது. நாங்கள் நினைத்தால் உங்களை வேரோடு வேராக அழித்து விட முடியும் என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.