“பாஜகவில் இணையாவிட்டால் நான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்னதாகவே மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என டெல்லி அமைச்சர் அதிஷி பேட்டியளித்துள்ளார்.  டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி எம்பி…

“தேர்தலுக்கு முன்னதாகவே மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என டெல்லி அமைச்சர் அதிஷி பேட்டியளித்துள்ளார். 

டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்,  பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கிடையே,  மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் டெல்லி மாநில நிதி அமைச்சர் அதிஷி இன்று முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக கூறியிருந்தார்.  இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அதிஷி பேசியதாவது:

“எனது நெருங்கிய உதவியாளர் மூலம் கட்சியில் இணைய பாஜக அழைப்பு விடுத்தது.  நான் அதை நிராகரிக்கும்பட்சத்தில் ஓரிரு மாதங்களில் கைது செய்யப்படுவேன்.  அடுத்த 2 மாதங்களில் நான் மற்றும் சௌரப் பரத்வாஜ்,  ராகவ் சதா மற்றும் துர்கேஷ் பதக் ஆகியோரை அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது ”

இவ்வாறு அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.