முதல் குழந்தை பிறந்து 22 நாட்களுக்குப் பின் 2-வது குழந்தை! – எங்கு நடந்தது சுவாரசிய சம்பவம்?

பிரட்டனில் முதல் குழந்தை பிறந்து  22 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரும்பாலும் பிரசவ காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறக்கும் செய்திகளை நாம் கேட்டிருப்போம். …

பிரட்டனில் முதல் குழந்தை பிறந்து  22 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும்பாலும் பிரசவ காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறக்கும் செய்திகளை நாம் கேட்டிருப்போம்.  இந்நிலையில்,  பிரிட்டனில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.  முதல் குழந்தை பிறந்த அடுத்த 22 நாட்களில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.  இந்த சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையே மிகுந்த வியப்பையும்,  குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் :“கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” – இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி

பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இந்நிலையில்,  அவருக்கு முதல் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது.  இதையடுத்து,  முதல் குழந்தை பிறந்த அடுத்த 22 வது நாளில் அந்த பெண்ணுக்கு மீண்டும் பிரசவ வலி வந்துள்ளது.

இதன் பின் மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு சிசேரியன் முலம் மீண்டும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.  குறிப்பாக, இரட்டை குழந்தைகள் என்றால்,  சில நிமிடங்கள் இடைவேளைக்கு பிறகு பிறக்கும் என்பதை கேட்டிருப்போம். ஆனால்,  முதல் குழந்தை பிறந்த அடுத்த 22 நாட்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது மருத்துவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.